நடிகர் ஜெயராமின் மனைவி ஒரு பிரபல நடிகையா?… இந்த வயசுலயும் இவ்ளோ அழகா இருக்காங்களே… – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் ஜெயராமின் மனைவி ஒரு பிரபல நடிகையா?… இந்த வயசுலயும் இவ்ளோ அழகா இருக்காங்களே…

Published

on

கோகுலம் எனும் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜெயராம். இதற்கு முன் மலையாளத்தில் வெளியான பல திரைப்படங்களில் நடிகர் ஜெயராம் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்தவகையில் ‘பொன்னியின் செல்வன்’ கதையில் வரும், ஆழ்வார்கடியான் கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் நந்தினியின் சகோதரர் கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தில், ஜெயராம் மற்றும் கார்த்தியின் காம்பினேஷன் சீன்கள் பலவும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

Advertisement

இதைத்தொடர்ந்து வெளியான இரண்டாம் பாகத்திலும் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. நடிகர் ஜெயராம், 1992ஆம் ஆண்டு பார்வதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் பிரபல நடிகையாக வலம் வந்தவர். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் ஜெயராமின் மகன், இளம் நடிகர் என்பதை அனைவரும் அறிவோம்.

இவர் பாவக்கதைகள் ஆந்தாலஜி படத்தில் கூட மிரட்டலான கதாபாத்திரத்தில் காளிதாஸ் ஜெயராம் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ஜெயராம் தனது மனைவியுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in