திருமணமாகி தனது கணவருடன் முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடும் இந்த ‘பாபநாசம்’ பட நடிகையின் மகள் யாருன்னு தெரியுதா?…. - cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணமாகி தனது கணவருடன் முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடும் இந்த ‘பாபநாசம்’ பட நடிகையின் மகள் யாருன்னு தெரியுதா?….

Published

on

கேரளாவை சேர்ந்தவர் ஆஷா சரத். நடிகை, தயாரிப்பாளர், டேன்சர் என இவருக்கு பல முகங்கள் உண்டு. துவக்கத்தில் இவர் மலையாள சீரியல்களில் நடித்தார். Friday என்கிற திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். 2012ம் வருடம் முதல் மலையாள படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் உயர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பார்.

மோகன்லால் நடித்து மலையாளத்தில் பெரிய ஹிட் அடித்த திரிஷ்யம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதே கதை தமிழில் ரீமேக் செய்யப்பட்டு பாபநாசம் என்கிற பெயரில் கமல் நடித்தபோது அதிலும் நடித்திருந்தார். இவரின் நடிப்பு கமலுக்கு பிடித்து போனதால் அவர் அடுத்து நடித்து தூங்காவனம் படத்திலும் நடிக்கவைத்தார். அதன்பின் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

பாகமதி, அன்பறிவு ஆகிய படங்களில் நடித்திருந்தார். மலையாள தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டவர் இவர். இவருக்கு உத்தாரா ஷரத் என்ற ஒரு மகள் உள்ளார். இவர்  2021 ஆம் ஆண்டு மிஸ்கா பட்டம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மலையாள சினிமாவில் கடந்த ஆண்டு கெத்தா என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

இந்நிலையில் உத்தாராவுக்கும் ஆதித்யா மேனன் எனும் சார்டர்ட் அக்கவுண்டராக பணிபுரிபவருக்கும் கொச்சியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். தற்பொழுது உத்தாரா தனது கணவருடன் இணைந்து தனது முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடுகிறார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in