வருங்கால கணவரின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடி சர்ப்ரைஸ் செய்த ‘பிகில்’ பாண்டியம்மா… வைரலாகும் வீடியோ… - cinefeeds
Connect with us

LATEST NEWS

வருங்கால கணவரின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடி சர்ப்ரைஸ் செய்த ‘பிகில்’ பாண்டியம்மா… வைரலாகும் வீடியோ…

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவரின் மகளான இந்திரஜா சங்கர் தற்பொழுது திரையுலகில் நடிகையாக கால் பதித்து கலக்கி வருகிறார். இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பிகில் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

இத்திரைப்படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த படத்திற்கு பின்னர் ரோபோ ஷங்கருக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் இந்திரஜா ஷங்கர். இத்திரைப்படத்திற்கு பின்னர் தன் மகளுக்கு பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வருவதாக ரோபோசங்கர் இணையத்தில் பகிர்ந்து இருந்தார்.

Advertisement

இதைத்தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது இவர் டாக்டர் கார்த்திக் என்பவரை காதலித்து வருகிறார். இருவருக்கும் விரைவில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை இந்திரஜா ஷங்கர் . இவர் தற்பொழுது தனது வருங்கால கணவரின் பிறந்தநாளுக்கு வேற லெவலில் சர்ப்ரைஸ் செய்து, அவரின் பிறந்தநாளை செமையாக கொண்டாடியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement