ஜெயிலர் வெற்றி.. அடுத்த படத்துக்கு நெல்சனின் சம்பளம் இத்தனை கோடிகளா?.. கேட்டாலே தல சுத்துது.. பரபரக்கும் கோலிவுட் வட்டாரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஜெயிலர் வெற்றி.. அடுத்த படத்துக்கு நெல்சனின் சம்பளம் இத்தனை கோடிகளா?.. கேட்டாலே தல சுத்துது.. பரபரக்கும் கோலிவுட் வட்டாரம்..!!

Published

on

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நெல்சன். இவர் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் மிக வெற்றி பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் திரைப்படத்தை இயக்கினார். இந்தத் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதன் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கியிருந்த நிலையில் சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  நெல்சனின் டாக்டர் திரைப்படம் 100 கோடி, பீஸ்ட் திரைப்படம் 200 கோடி மற்றும் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 500 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் இயக்குனராக தற்போது நெல்சன் மாறி உள்ளார்.

Advertisement

இயக்குனர் அட்லிக்கு கிடைப்பது போல 500 கோடி சம்பளத்தை அடுத்ததாக நெல்சன் டார்கெட் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் திரைப்படத்திற்கு 22 கோடி நெல்சன் சம்பளம் வாங்கியுள்ள நிலையில் தற்போது சிறிது காலம் ஓய்வெடுத்துவிட்டு புதிய ஸ்கிரிப்ட் உடன் டாப் ஹீரோ ஒருவரை நெல்சன் இயக்க உள்ளதாகவும் அதற்கு 55 கோடி சம்பளம் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்கள் 50 கோடிக்குள் சம்பளம் வாங்கும் நிலையில் தற்போது நெல்சன் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in