CINEMA
கணவரோடு விவாகரத்தா…? தீயாய் பரவும் ஷாக் நியூஸ்…. பாவனா என்ன சொன்னார் தெரியுமா…??
தமிழில் சித்திரம் பேசுதடி, வெயில், தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பாவனா 2017 ஆம் வருடத்திற்கு பிறகு 5 வருட இடைவெளி. அதன் பிறகு 2023 ஆம் வருடம் வெளியான மலையாள படத்தின் மூலமாக மீண்டும் திரையுலகுக்கு திரும்பினார் நடிகை பாவனா. தற்போது அவருடைய நடிப்பில் ஹன்ட் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. பாவனா நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் அவருடைய கணவர் நவீனை விவாகரத்து செய்ததாக வெளியான நிலையில், இந்த தகவலை பாவனா மறுத்துள்ளார். அவருடன் இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிராததை சுட்டிக்காட்டி விவாகரத்து பெற்றதாக தகவல் பரவி வருகிறது. இதை மறுத்துள்ள பாவனா, கணவருடன் இருக்கும் படத்தை வெளியிடாததால் விவாகரத்து ஆகி விடாது எனக் கூறியுள்ளார்.