LATEST NEWS
பொது இடத்தில் இப்படியா?…. மனைவியுடன் லிப் லாக் புகைப்படத்தை வெளியிட்ட பென்னி தயாள்….!!!!
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களில் மிகவும் பிரபலமானவர்தான் பென்னி தயாள். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் குரலில் பாடி வெளியாக உனக்கு என்ன வேணும் சொல்லு, டார்லிங் டம்பக்கு மற்றும் ஓமன பெண்ணே உள்ளிட்ட பல்வேறு பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளன.
இவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்துள்ளார்.
தற்போது வரை சூப்பர் சிங்கர் 8 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதில் நடுவராக இருந்து பென்னி தயால் தலைமை தாங்கினார். தற்போது இவர் பிசியான பாடகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
இதனிடையே பென்னி தயால் கடந்த 2016 ஆம் ஆண்டு கேத்ரின் தங்கம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பென்னி தயால் தனது மனைவியுடன் பேஷன் நிகழ்ச்சிக்கு சென்று உள்ளார்.
அப்போது அவர் மனைவியுடன் லிப் லாக் செய்து அங்கு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
