விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் குடும்பம்,காதல் மற்றும் நட்பு என அனைத்தையும் கொண்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதால் இதனை பார்ப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

அப்படி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்கள் சன் டிவியை முந்தி அடித்துள்ளன. விஜய் டிவியில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் வெற்றிகரமாக சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இளைஞர்களை கவரும் சீரியல்கள் மற்றும் வீட்டு பெண்கள் பார்ப்பது போல கதை உள்ள சீரியல்கள் என அனைத்தும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் விஜய் டிவி தொடர்ந்து புதுப்புது தொடர்களாக களமிறக்கி வருகிறது. தற்போது விஜய் டிவியின் மௌன ராகம் 2 மற்றும் நம்ம வீட்டு பொண்ணு ஆகிய இரண்டு சீரியல்களும் அடுத்த வாரத்தோடு முடிய உள்ளது.

மௌனராகம் 2 சீரியல் இன் கிளைமாக்ஸ் மார்ச் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை, நம்ம வீட்டு பொண்ணு சீரியல் கிளைமாக்ஸ் மார்ச் 18ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. திடீரென இந்த இரண்டு சீரியலும் முடிவுக்கு வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.