விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் முழுக்க முழுக்க குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதால் இதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அண்ணன் தம்பி பாச கதையை கொண்டு சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது வீட்டில் உள்ள மூன்று மருமகள்கள் கர்ப்பமாக இருக்க மீனா அனைவரையும் கவனித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் ஜீவா தனது அண்ணன் மூர்த்தியிடம் கோபமாக பேச அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் வரும் வாரங்களில் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியல் தொடக்கத்திலிருந்து ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தற்போது ஐஸ்வர்யா ரோட்டில் நடித்து வரும் சாய் காயத்ரி திடீரென விலகி விட்டார்.

கதை மற்றும் அடுத்து வர இருக்கும் காட்சிகளில் நடிக்க விருப்பமில்லை என் கேரியருக்கு இது செட்டாகாது என்பதால் விலகி விட்டேன் என்று அவர் காரணம் கூறியிருந்தார். இந்நிலையில் புது ஐஸ்வர்யாவாக முன்பு நடித்து வந்த விஜே தீபிகாவையே மீண்டும் கொண்டு வந்துள்ளனர்.தீபிகா தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஷூட்டிங் இல் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.