LATEST NEWS
‘இந்த பாட்டை பாத்து தான் அவுருமேல எனக்கு லவ்வோ லவ்வுன்னு லவ் வந்துச்சு’… மணிமேகலை ஹுசைன் லவ் சீக்ரெட் song இதுதானா?…
விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விஜே மணிமேகலை. சமீபத்தில் நான்காவது சீசன் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் இருந்து எந்த அறிவிப்பும் இல்லாமல் இவர் விலகினார். அந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இவரின் வெளியேற்றத்திற்கு என்ன காரணம் எனவும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தங்களின் சொந்த நிலத்தில் வீடு கட்டும் வேலையில் மணிமேகலையும் அவரின் கணவரும் பிசியாக உள்ளனர். இவர் டான்சர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் வேறு மதம் என்பதால் மணிமேகலை வீட்டில் கடும் எதிர்ப்பு வந்த நிலையில் அதை மீறி தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
டான்சரான ஹுசைன் ராகவா லாரன்ஸ் உடன் ‘கருப்பு பேரழகா’ என்ற பாடலில் டான்ஸ் ஆடி இருப்பார். அதை பார்த்து தான் மணிமேகலை அவருடன் பேசி பழகி காதலில் விழுந்து இருக்கிறார். இந்த விஷயத்தை ராகவா லாரன்ஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். தற்பொழுது இத்தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.