LATEST NEWS
‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த நடிகரா இவர் ?.. ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கும் புகைப்படம்…
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தின் சசண்முகம் தட்சன்ராஜ் தயாரிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சார்பட்டா பரம்பரை’. இப்படத்தில் ஆர்யா, ஜான் கோக்கன், ஜான் விஜய், பசுபதி, கலையரசன், ஷபீர் கல்லறக்கல், துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், அனுபமா குமார், சஞ்சனா நடராஜன் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ‘டான்சிங் ரோஸ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் ஷபீர் கல்லறக்கல். இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர்.நாடகக் கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் ஷபீர்.
2014 ஆம் ஆண்டு வெளியான ‘நெருங்கி வா முத்தமிடாதே’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் ரசிகர்களை அறிமுகமானர். இப்படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதை தொடர்ந்து கார்த்தி, விஷால் மற்றும் சயீஷா நடிப்பில் வெளியான ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க 2017-ஆம் ஆண்டில் ஷபீர் ஒப்பந்தமானார்.
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘அடங்கமறு’ இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சபீர். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்டை’ படத்தில் நடித்திருந்தார். மற்றப்படத்தில் இவரை பார்க்கும்போது கொஞ்சம் அதிக வயதுடையவர் போல் தெரிந்தது, சார்பட்டா’ படத்திற்காக தனது மொத்தமாக உடல் எடையை குறைத்து,ஆனால் அசல் பாக்சிங் வீரராக நடித்து ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறியிருக்கிறார்.
இப்படத்தில் ஒரு சில சீன்களில் மட்டும் தோன்றினாலும்.அவருடைய பாடிலாங்குவேஜ், மேனரிசம், தோற்றம் போன்றவையாவும் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்துள்ளது. தற்போது இவரை புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது .
