காக்கா முட்டை படத்தில் நடித்த குட்டி பசங்களா இது?… ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாங்களே..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காக்கா முட்டை படத்தில் நடித்த குட்டி பசங்களா இது?… ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாங்களே..!!

Published

on

தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு சைலன்டாக வெளியாகி மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய திரைப்படம் தான் காக்கா முட்டை. சென்னையில் மிகவும் பின்தங்கிய பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் ஒரு பீட்சா சாப்பிடுவதற்காக எடுக்கும் முயற்சிதான் மொத்த படத்தின் கதை. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த இந்த படத்தை மணிகண்டன் இயக்கி இருந்தார்.

இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு மற்றும் ரமேஷ் சில குறிப்பிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒரு நல்ல நடிகை என்ற அடையாளம் கிடைத்தது.

Advertisement

ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்கள் தான் விக்னேஷ் மற்றும் ரமேஷ் என்ற இரண்டு சிறுவர்கள். இவர்கள் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் சிறந்த குழந்தைகள் திரைப்படம் என்ற பிரிவில் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோருக்கு தேசிய விருதும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களாக விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்நிலையில் காக்கா முட்டை திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் ஆகியுள்ள நிலையில் அந்த திரைப்படத்தில் நடித்த விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோரின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Chennairockerz இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@chennairockerz)

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in