தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். ரசிகர்களால் உலகநாயகன் என்று அறியப்படுபவர். பல வருடங்களுக்குப் பிறகு அண்மையில்  வெளியான விக்ரம் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்திய 2 திரைப்படத்தின் நடித்து வருகின்றார். இதனிடையே விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை கமல் பரிசாக வழங்கியிருந்தார்.

அது மட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தில் பணியாற்றிய 13 துணை இயக்குனர்களுக்கும் 13 பைக்கை பரிசாக வழங்கினார். இந்நிலையில் அடுத்ததாக கமல்ஹாசன் வினோத் இயக்கத்தில் தான் நடிக்க உள்ளது உறுதியாகி உள்ளது. அதற்காக படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் இயக்குனர் அ.வினோத்திற்கு வெளியே உயர்ந்த சொகுசு கார் ஒன்றை கமல்ஹாசன் பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளாராம். லோகேஷை தொடர்ந்து இயக்குனர் வினோத்துக்கு கமல்ஹாசன் கார் வாங்கி கொடுத்துள்ளது தற்போது கோலிவுட் வட்டாரத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.