LATEST NEWS
அந்த நேரத்துல நான் என்ன பண்ணுவேன்னு கௌதமிக்கு மட்டும்தான் தெரியும்… முதல் முறையாக மனம் திறந்த கமல்ஹாசன்..!!!
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்தான் நடிகை கௌதமி.இவர் ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சில வருடங்களுக்கு முன்பு கூட கமல்ஹாசனுடன் இணைந்து பாபநாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படி சினிமாவில் பிஸியாக பலம் வந்த இவர் 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாண்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரே வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வரை சென்று முடிந்து போனது. இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகளும் உள்ளார். இதனிடையே விவாகரத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் உடன் கௌதமி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
அதன் பிறகு அவரிடம் இருந்தும் பிரிந்து விட்டதை பற்றி முறைப்படி அறிவித்தார். அதற்கு முன்னதாக இருவரும் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அதில் பேசிய கமல், விஸ்வரூபம் திரைப்படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த பிரச்சனை தொடர்பாக கமலுக்கு செய்தி வரும்போது கௌதமியும் அருகில் இருந்துள்ளார்.
அப்போது ரொம்பவே டென்ஷன் ஆகி ரூமில் சென்று படுத்து தூங்கி விட்டேன். இப்படி தனக்கு எப்போது பிரச்சனை வந்தாலும் தனியாக போய் படுத்து தூங்கி விடுவேன். இது கௌதமிக்கு மட்டும்தான் நன்றாக தெரியும் என கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
