LATEST NEWS
தமன்னாவிற்கு விலை உயர்ந்த வைர மோதிரத்தை பரிசாக வழங்கிய பிரபலம்… விலையைக் கேட்டா ஆடி போய்டுவீங்க…!!!
தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா அளவில் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை தான் தமன்னா. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக நுழைந்தார். அந்த திரைப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.
இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்நிலையில் தமன்னாவிடம் விலை உயர்ந்த வைர மோதிரம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரிடம் உள்ள இந்த மோதிரம் உலகின் ஐந்தாவது பெரிய வைர மோதிரம் ஆகும். இதன் மதிப்பு சுமார் இரண்டு கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இவ்வளவு விலை உயர்ந்த வைர மோதிரத்தை ராம் சரணின் மனைவி உபசானா தமன்னாவிற்கு பரிசாக கொடுத்துள்ளார். சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமன்னாவிற்கு இந்த மோதிரத்தை அவர் பரிசாக வழங்கியுள்ளார்.
