LATEST NEWS
“இன்னும் அவரை என்னால மறக்க முடியல”… கல்யாணம் பண்ண இதுதான் காரணம்… மனம் உருகி பேசிய ராமராஜன் மனைவி நளினி..!!

90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை நளினி. இவர் நடிகர் ராமராஜனை காதலித்து 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அருணா மற்றும் அருண் என்ற இருட்டை குழந்தைகள் உள்ளனர். ஆனால் திடீர் மன கசப்பு காரணமாக 2000 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து மகள்களின் திருமணம் நடைபெற சின்னத்திரை சீரியல்களில் தற்போது நளினி பிஸியாக உள்ளார்.
அதனைப் போலவே ராமராஜன் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நளினி தனது காதல் கதை குறித்து பேசி உள்ளார். அதாவது தான் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதாக கூறிய அவர் ராமராஜன் நல்ல உழைப்பாளி, பாவம் தெரியாமல் என்ன லவ் பண்ணி விட்டார்.
அதனால் நாங்கள் திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. எங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகாத காரணத்தால் பிரிஞ்சிட்டோம். ஆனால் இன்றும் நான் அவரை காதலித்து கொண்டு தான் இருக்கிறேன். அது அவருக்கும் நன்றாக தெரியும் என்று தனது காதல் பற்றிய ஏக்கத்துடன் நளினி மனம் திறந்து பேசி உள்ளார். விவாகரத்து பெற்று பிரிந்தாலும் கணவரை விட்டுக் கொடுக்காமல் பேசியதை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.