இந்த சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா?… புகைப்படம் (உள்ளே)..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா?… புகைப்படம் (உள்ளே)..!!

Published

on

தமிழ் சினிமாவின் பிரபலமான இளம் நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் பரத். இவருக்கு ப்ரீத்தி என்ற ஒரு தங்கை உள்ளார். தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் பரத் முதன்முதலில் சினிமாவில் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து செல்லமே, காதல், வெயில் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதிலும் குறிப்பாக இவர் காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகின் உச்சத்திற்கு சென்றார். இப்படி பிசியான நடிகராக இருந்த இவர் ஜெஸ்லி ஜோஸ்வா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.

Advertisement

இதனிடையே நடிகர் பரத் இறுதியாக காளிதாஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.  இதனைத் தொடர்ந்து பரத் பாலிவுட் மற்றும் இரண்டு மலையாள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் பரத் தனது சகோதரியுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in