CINEMA
திருமணம் முடிந்த கையோடு கவின் மனைவி போட்ட முதல் பதிவு… என்ன சொல்லி இருக்காருன்னு நீங்களே பாருங்க..!!

நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தேடி தந்தது சரவணன் மீனாட்சி சீரியல் தான். அந்த சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார். இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அந்த நிகழ்ச்சியில் அற்புதமாக விளையாடிய இவர் மற்றொரு பக்கம் லாஸ்ட்லியாவுடன் காதல் கொண்டார்.இவர்களின் காதல் விவகாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் இருவரும் பிரேக் அப் செய்து விட்டதாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு கவின் சினிமாவில் பிசியாக நடிக்க தொடங்கினார்.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே கவின் கடந்த இருபதாம் தேதி அவருடைய நீண்ட நாள் காதலி மோனிகா டேவிட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் நடிகர் கவின் மனைவி மோனிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் முடிந்த பிறகு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கவிநின் அதிகார பூர்வ மனைவி என ஆங்கிலத்தில் அவர் குறிப்பிட்டுள்ள நிலையில் அந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.