LATEST NEWS
காமெடி நடிகர் கருணாகரனின் மனைவி, 2 மகள்களை பார்த்துள்ளீர்களா?.. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர்தான் கருணாகரன். இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ் சினிமாவில் முதன் முதலில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு என்ற திரைப்படத்தின் மூலம் கருணாகரன் நடிகராக அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா மற்றும் விவேகம் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கருணாகரன் தனது 2013 ஆம் ஆண்டு தென்றல் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளன. தற்போது நடிகர் கருணாகரன் தன்னுடைய மனைவி மற்றும் மகள்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு அழகிய புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.