#image_title

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக கொடிகட்டி பறந்தவர் தான் கே.விஸ்வநாத். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்தவர்.

இவர் இயற்றிய சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய திரைப்படங்கள் இந்திய சினிமாவில் மிக முக்கிய திரைப்படமாகும். இவர் முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகினி, உத்தம வில்லன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய இவர் இந்திய திரைப்படத் துறையின் உயரிய விருதான தாதா சாகே பால்கே விருது பெற்றவர். இவர் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இந்திய அரசின் தேசிய விருதை ஆறு முறை வென்றவர். எட்டு முறை மாநில அரசின் நந்தி விருதை பெற்றுள்ளார். இவர் தன்னுடைய 93 வது வயதில் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில் இவரின் மனைவி ஜெயலட்சுமி மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். இவருக்கு வயது 86. கணவர் உயிரிழந்து ஒரு மாதத்திலேயே மனைவி இறந்துள்ளது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.