எம்மாடி …! கடைக்குள் புகுந்து மரண பயம் காட்டிய சிறுத்தை…! ஷட்டர் போட்டுத் தப்பிய ஊழியர்..! பகீர் கிளப்பும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எம்மாடி …! கடைக்குள் புகுந்து மரண பயம் காட்டிய சிறுத்தை…! ஷட்டர் போட்டுத் தப்பிய ஊழியர்..! பகீர் கிளப்பும் வீடியோ..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் தோங்க் மாவட்டத்தில் உள்ள தோடாராய் சிங் என்ற பகுதியில், காட்டிலிருந்து தப்பி வந்த சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. வீதிக்கு வந்த அந்தச் சிறுத்தை முதலில் வனத்துறை தன்னார்வலர் ஒருவரைத் தாக்கியது. பின்னர், அங்கிருந்து தப்பி ஓடி அருகில் இருந்த ஒரு மதுபானக் கடைக்குள் பாய்ந்து புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது.

கடைக்குள் நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த வாடிக்கையாளர் மற்றும் விற்பனையாளரான சஞ்சய் குர்ஜார் ஆகிய இருவரைத் தாக்கிப் படுகாயப்படுத்தியது. கடுமையான தாக்குதலுக்கு உள்ளான போதிலும், விற்பனையாளர் சஞ்சய் குர்ஜார் சாமர்த்தியமாகச் செயல்பட்டு சிறுத்தையிடம் இருந்து தப்பி வெளியே வந்து, உடனடியாகக் கடையின் ஷட்டரை கீழே இறக்கிப் பூட்டினார். இதனால் சிறுத்தை கடைக்குள்ளேயே முடங்கியதுடன், மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப் பகுதிக்குள் அது புகுவது தடுக்கப்பட்டது.

Advertisement

தகவலறிந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்து மக்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ஜெய்ப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு வனத்துறை மீட்புக் குழுவினர், சுமார் 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மயக்க ஊசி செலுத்திச் சிறுத்தையைப் பாதுகாப்பாகக் கூண்டில் அடைத்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in