LATEST NEWS
நீட் தேர்வு ஒரு மோசடி…! கைது பண்ணா நியாயம் மறைஞ்சிடுமா..? சிஎம் விஜய்க்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அதிரடி கண்டனம்..!!
நீட் தேர்வுக்கு எதிரான முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே குரல் எழுப்பியதற்காக, பிரபல ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். நீட் தேர்வு என்பது முற்றிலும் முறைகேடுகள் நிறைந்த ஒரு மோசடித் தேர்வு என்று சாடியுள்ள அவர், அதற்கு எதிராக எழும் மக்களின் நியாயமான மற்றும் தார்மீகக் குரல்களை ஒடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது என்றும், மக்களின் உணர்வுகளுக்கு அரசு உடனடியாகச் செவிமடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் உண்மையான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அறவழியில் போராடிய பாடகர் அறிவின் குரலை, அதிகார பலம் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் ஒடுக்க நினைக்கும் தவெக அரசின் இந்த நடவடிக்கை முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானது என அவர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் இந்த ஆவேசமான கண்டனம் தற்பொழுது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் புதிய விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
