“நண்பா நீ இல்லாத உலகத்துல நானும் இல்ல” நண்பன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் கரை திரும்பிய மீனவர் உயிரிழப்பு – சென்னையில் நெஞ்சை உருக்கும் சோகம்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நண்பா நீ இல்லாத உலகத்துல நானும் இல்ல” நண்பன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் கரை திரும்பிய மீனவர் உயிரிழப்பு – சென்னையில் நெஞ்சை உருக்கும் சோகம்..!!!

Published

on

சென்னையில் உடல்நலக் குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரகாஷ் (46) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் செய்தி அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், அவரது மறைவு குறித்த தகவல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த அவரது நெருங்கிய நண்பருக்குத் தெரிவிக்கப்பட்டது.

கடலில் மீன்பிடித்துவிட்டுப் பாசத்துடன் கரைக்குத் திரும்பிய அவரது உயிர் நண்பரான ஏகாம்பரம் (47), பிரகாஷின் மறைவுச் செய்தியைக் கேட்டவுடன் தாங்க முடியாத துயரத்திலும் கடும் அதிர்ச்சியிலும் உறைந்து போனார். நண்பனைப் பிரிந்த சோகம் தாங்காமல் ஏகாம்பரத்திற்குச் சம்பவ இடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிரும் பிரிந்தது. நண்பனின் இறப்பைக் கேட்ட மாத்திரத்திலேயே மற்றொரு நண்பரும் உயிரிழந்த நெஞ்சை உருக்கும் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in