ரேஷன் அரிசி கீழ்தரமானது அல்ல.. “நான் அதுதான் சாப்பிடுறேன்” அதை சாப்பிட்டா தான் ருசி தெரியும்… அமைச்சர் வெங்கடரமணன் சொன்ன விஷயம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரேஷன் அரிசி கீழ்தரமானது அல்ல.. “நான் அதுதான் சாப்பிடுறேன்” அதை சாப்பிட்டா தான் ருசி தெரியும்… அமைச்சர் வெங்கடரமணன் சொன்ன விஷயம்..!!

Published

on

அரசியல் பணி தொடங்குவதற்கு முன்பிருந்தே, தான் சிறு வயது முதலே ரேஷன் அரிசிதான் சாப்பிட்டு வருவதாக மாநில உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் ஆவேசமாகப் பேசிய அவர், எனக்குப் பிடித்திருப்பதால் அதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வருகிறேன் என்றும், ரேஷன் அரிசி என்பது எப்போதும் கீழ்த்தரமான அரிசி அல்ல என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், ரேஷன் அரிசியை வாங்கிச் சுவைக்காத மக்களுக்கு அதன் உண்மையான அருமை என்னவென்று தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் சுமார் 5 முதல் 6 கோடி மக்களுக்கு இந்த ரேஷன் அரிசிதான் சென்றடைகிறது என்றும் அதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் தரமாக இருக்கிறது என விளக்கமளித்த அமைச்சர் வெங்கடரமணன், மக்கள் குறிப்பிட்ட அரிசியைத்தான் சாப்பிட வேண்டும் என்று தான் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன் என்றும் தனது உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in