CRIME
ஊடகத்துறையில் பெரும் இழப்பு.. இளம் பத்திரிகையாளர் பிரியவதனா திடீர் மரணம்.. சென்னை பிரஸ் கிளப் இரங்கல்..!!
தந்தி டிவி செய்தி வாசிப்பாளரான இளம் ஊடகவியலாளர் பிரியவதனாவின் அகால மரணத்திற்குச் சென்னை பிரஸ் கிளப் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. இதழியல் துறையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இளம் பத்திரிகையாளரான பிரியவதனா, தற்பொழுது தந்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வந்தார். இதற்கு முன்பாக, இவர் வேந்தர் டிவியிலும் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்து ஊடகத்துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று செய்தி வாசிப்பாளர் பிரியவதனா எதிர்பாராத விதமாக திடீரென உயிரிழந்தார். மிகக் குறைந்த வயதிலேயே நேர்ந்த அவரது இந்த அல்பாயுசு மரணம், தமிழக ஊடக உலகிலும் அவரது சக பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் மீளாத் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுச் செய்தி கேட்டு ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர் சமூகமும் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளது. செய்தி வாசிப்பாளர் பிரியவதனாவை இழந்து தவிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் அவருடன் பணியாற்றிய சக ஊடக நண்பர்கள் அனைவருக்கும் சென்னை பிரஸ் கிளப் சார்பாக தங்களது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்வதாக அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
