‘என் மகனின் முதல் சோறு உண்ணும் விழா’… அழகிய புகைப்படங்களை வெளியிட்ட மிர்ச்சி செந்தில்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘என் மகனின் முதல் சோறு உண்ணும் விழா’… அழகிய புகைப்படங்களை வெளியிட்ட மிர்ச்சி செந்தில்…

Published

on

இயக்குனர் ராம்குமார் தாஸ் இயக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் ‘சரவணன் மீனாட்சி’. இந்த சீரியலானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் செந்தில் குமார், ஸ்ரீஜா போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.

இந்த சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் செந்தில். இவர் சென்னையை சேர்ந்தவர்.  இவர் தந்தை எஸ்  கோவிந்தன்  தாய் பிரேமாவதி .

Advertisement

இவர் சென்னை பெரம்பூரில் உள்ள டான் போஸ்கோவில் பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பிறகு சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரியில் பீ காம் இளநிலை பட்டம் பெற்றார். அதை தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் finance and control முதுகலை பட்டம் பெற்றார்.

அதன் பிறகு வங்கியில் சிறிது காலம் பணியாற்றினார் . 2003 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ரேடியோ மிர்ச்சியில்  ரேடியோ ஜாக்கியாக தனது பணியை தொடங்கினார். அதன் பிறகு இவர் கோயம்புத்தூரில் உள்ள ரேடியோ மிர்ச்சி தலைவராக நான்கு வருடங்கள் பணியாற்றினார்.

Advertisement

இவர் ரேடியோ ஜாக்கியாக  மிர்ர்ச்சி கோல்ட், மிர்ர்ச்சி பஜார், பேட்டை ராப், லவ் டாக்கீஸ் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.ரேடியோ மிர்ச்சியில் இரவு 9 மணி முதல்  11 மணி வரை ஒளிபரப்பாகும் ‘நீங்க நான் ராஜா சார்’ என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

அதைத் தொடர்ந்து 2018 விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மதுரை’ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

Advertisement

இவர் சின்னத்திரையில் சீரியல்கள் நடித்ததன் மூலம்  வெளித்திரைல் நடிக வாய்ப்பு கிடைத்தது.   2005 ஆம் ஆண்டு வெளியான ‘தவமாய் தவமிருந்து’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

இவர் தமிழில் சென்னை 600028 , கண் பேசும் வார்த்தைகள்,  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், பப்பாளி,  வெண்ணிலா கபடி குழு,  சூரரைப் போற்று போன்ற பல படங்களில்  நடித்துள்ளார். நடிகர் செந்தில் தன்னுடன் சரவணன் மீனாட்சி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீஜா சந்திரன்  காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இவருக்கு ஒரு மகனும் உள்ளார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். இவர்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேரள மாநிலம் திருவல்லாவில் உள்ள ஸ்ரீ வல்லபநாத சுவாமி கோயிலில் தன் மகனுக்கு அன்னபிரசன்னம் விழா நடைபெற்றதை தெரிவித்து இருந்தார். தன் மகனுக்கு ஸ்ரீ வல்லவ தேவ் என்று பெயர் சூட்டி உள்ளனர்.  தற்போது இந்த புகைப்படம் ஆனது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in