LATEST NEWS
பிக் பாஸ் சீசன் 6….! அந்த மைனா வரலனா என்னப்பா….. நம்ம மைனாவை இறக்குவோம்….. விஜய் டிவி போட்ட பக்கா பிளான்….!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் அதிக அளவு பார்க்கப்படும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி களத்தில் இறங்கினால் விஜய் டிவி டிஆர்பி ரேட்டில் டாப் இடத்தில் இருக்கும். இந்த நிகழ்ச்சியை அடித்துக்கொள்ள வேறு எதுவும் கிடையாது. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பேமஸ் ஆனது பிக் பாஸ்.
கடந்த ஐந்து சீசன்களும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 6-வது சீசன் அக்டோபர் 6-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த முறை யார் யார் செல்ல போகிறார்கள் என்ற தகவல் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி, ரோஷினி ஹரி பிரியன், ரக்சன், ராஜலட்சுமி, சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக், தர்ஷா குப்தா, மஞ்சிமா மோகன் என்று இவர்களின் பெயர் அடிபட்டு வருகின்றது.
அந்த வகையில் அமலாபால் பிக் பாஸ் சீசனுக்குள் செல்ல உள்ளார் என்று ஒரு தகவல் வெளியானது. அதன் பிறகு இவர் பல கண்டிஷன் போட்ட காரணத்தினால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இவரை அனுப்ப முடியாது என்று தெரிவித்தனர். இதனால் அந்த மைனா வரவில்லை என்றால் என்ன நாம் களத்தில் சின்னத்திரை மைனாவை இறக்கி விடுவோம் என்று முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்றது விஜய் டிவி. அதாவது நம்ம மைனா நந்தினியை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
