CINEMA
இனி டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டேன்…. காரணத்தை உடைத்து பேசிய மைனா நந்தினி….!!
சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் மைனா நந்தினி. இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது அவர் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ்களிலும் கலக்கி வருகிறார். இவருடைய எதார்த்தமான நடிப்புதான் இவருக்கு பிளஸ் பாயிண்டாக அடுத்தடுத்த வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இவரிடம் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், ஏன் முன்பு போன்று டிவி நிகழ்ச்சிகளில் வருவதில்லை. உங்களை யாரும் நிகழ்ச்சிக்கு கூப்பிடவில்லையா? அல்லது ஏதேனும் பிரச்சனையா? என்று கேட்டதற்கு, பதிலளித்த அவர், அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ஆரம்பத்தில் டிவி சேனல்களில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். இப்பொழுது அதன் மூலமாக பல பெரிய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
என்னுடைய கனவை நோக்கி தான் நான் பயணிக்க முடியும். அதனால்தான் என்னுடைய அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறேன். எனக்கு யாரோடும் கருத்து வேறுபாடு கிடையாது என்று கூறியுள்ளார். மேலும் நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிடுகிறார்கள். ஆனால் என்னால் இப்பொழுது அங்கு முன்பு போல போக முடியவில்லை. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருவதால் அதில் கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார்.
