தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் கடந்த வருடம் ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

 

இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் அவர்களின் திருமண புகைப்படங்கள் ஒரு சில மட்டும் வெளியாகி உள்ளது. விரைவில் இவர்களின் திருமண வீடியோவை நெட்ப்ளிக்ஸ் நிறுவன வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி அறிவித்த நிலையில் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

 

 

அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் அதன் பிறகு வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக் கொண்டதாகவும் விளக்கம் அளித்த நிலையில் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. தற்போது நயன் மற்றும் விக்கி தம்பதி தனது குழந்தைகளுடன் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

 

இந்நிலையில் தனது மகன்கள் உயிர் மற்றும் உலகம் இருவரின் முகத்தை இதுவரை எந்த ஒரு மீடியாவிலும் நயன்தாரா காட்டவில்லை. தற்போது முதல் முறையாக அவர்களுடைய வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. மும்பை விமான நிலையத்தில் நயன்தாரா தனது கணவர் மற்றும் மகன்கள் உடன் வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Viral Bhayani இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@viralbhayani)