தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மனதை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இவரை நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இவர் அடுத்தடுத்து படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவரும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக அடிக்கடி செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் இதுவரை அவர்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் காதலர் தினத்தில் ராஷ்மிகா ஒருவருடன் விளையாடும் வீடியோவை வெளியிட அதற்கு ரசிகர்கள் லைக் குவித்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க