LATEST NEWS
தன்னைவிட 6 வயது இளம் நடிகருடன் ஜோடி போடும் திரிஷா… யார் தெரியுமா?.. லீக்கான தகவல்..!!
தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை முன்னணி நடிகையின் பட்டியலில் இருந்து கீழே இறங்காமல் இருப்பவர்தான் திரிஷா. தற்போது 40 வயதிலும் சினிமாவில் கம்பேக் கொடுத்து பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இறுதியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த நிலையில் தற்போது விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதேசமயம் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்திலும் திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 100 கோடி வசூல் நாயகனின் திரைப்படத்தில் திரிஷா நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதாவது மலையாளத்தில் ஒரே ஒரு திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்த நிலையில் தற்போது நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட 2018 திரைப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக டொவினோ தாமஸ் என்பவர் நடித்தார்.
இந்நிலையில் தற்போது அவர் ஐடென்டிடி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் நிலையில் இந்த திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கின்றார். அதே சமயம் இந்த திரைப்படத்தின் கதாநாயகன் திரிஷாவை விட ஆறு வயது இளமையானவர். இருந்தாலும் இவர்களின் ஜோடி திரையில் பார்க்க நன்றாகத்தான் உள்ளது.
