LATEST NEWS
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று காணாமல் போன பிரபலங்கள் யார் யார் தெரியுமா?.. தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் சென்று பங்கேற்றால் பிரபலமாகி விடலாம் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று ஃபேமஸான பிரபலங்கள் பலரும் தற்போது இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டனர். அவர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
ஆரவ்:
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று வெற்றியாளராக வாகை சூடியவர் தான் ஆரவ். இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனியின் சைத்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் திண்டாடி வருகிறார்.
ராஜு:
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்துகொண்டு டைட்டில் வின்னராக வாகை சூடியவர் தான் ராஜு. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு பல படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக வாகை சூடினாலும் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு இவரின் திறமைக்கான அங்கீகாரம் எதுவும் கிடைக்கவில்லை.
ஆரி:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு மிகவும் நேர்மையாகவும் சமூக அக்கறை கொண்டவராகவும் விளையாடி ரசிகர்களை கவர்ந்தவர் தான் ஆறு. டைட்டில் வின்னர் பட்டத்தை வென்ற இவர் இந்த புகழை வைத்துக்கொண்டு வெளியில் வந்த பிறகும் இவரை தேடி பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
லாஸ்லியா:
இலங்கையில் பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்தான் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவர் நடித்த படங்கள் எதுவுமே ஹிட் கொடுக்கவில்லை. அதனால் போட்டோ சூட் பக்கம் திரும்பி தினம் தோறும் போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஷெரின்:
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஷெரின். ஆனால் கடைசிவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளராக பங்கு பெற்றார். வெளியில் வந்த பிறகு இவர் எங்கு போனார் என்ற தடமே தெரியவில்லை.
தர்ஷன்:
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவரின் நிதானமும் தைரியமும் பார்ப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் தொகுத்து வழங்கிய கமலுக்கும் மிகவும் பிடித்திருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தின் மூலம் உங்களுக்கு ஒரு படம் உண்டு என கமல்ஹாசன் கூறியிருந்தார். ஆனால் நிகழ்ச்சி முடிந்த பிறகு அது காற்றோடு காற்றாக போய்விட்டது.
