தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஸ்மிகா மந்தனா. கன்னடத்தில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கில் நடித்த ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து புஷ்பா திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பிறகு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் மட்டுமே நடித்ததாக ராஷ்மிகா கூறினார்.

வாரிசு திரைப்படத்தில் ஜிமிக்கி பொண்ணு, ரஞ்சிதமே பாடல், வாரிசு என மூன்று பாடல்களிலும் நடனத்தை அசத்தினார். இந்நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

அந்த விழாவில் ரஞ்சிதமே மற்றும் புஷ்பா திரைப்படத்தில் இடம்பெறும் சாமி சாமி பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.