சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை அனு. இவர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தத் தொடரில் இவரின் நடிப்பை வெகுவாக பாராட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, கல்யாணம் முதல் காதல் வரை, விதி, ஆண்டாள் அழகர் மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் தான். அந்த சீரியல் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு தனது கணவருடன் இணைந்து விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். இவர் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.
அதே சமயம் இவருக்கு சீமந்தம் நடந்த அழகிய புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் பிரசவ வழியில் துடித்தது முதல் கையில் குழந்தையை முதன்முறையாக வாங்கியது வரை அதனை வீடியோவாக எடுத்து அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க