CINEMA
மாமியார் மெச்சும் மருமகன் ஜெயம் ரவி…. ஆனா இப்படி ஏன் நடந்துச்சு…. வருத்ததில் ரசிகர்கள்…!!!
தமிழ் சினிமாவில் திரையுலகங்கள் திரையுலகினர் பலரும் விவகாரத்தை பெற்று வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அந்தவரிசையில் தற்போது ஜெயம் ரவியும் விவாகரத்து அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி குறித்து மாமியார் சுஜாதா விஜயகுமார் பெருமையாக பேசியது குறித்து தற்போது ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
அதாவது என் மகளுக்கு சட்டு சட்டுனு கோபம் வரும். ஜெயம் ரவி ரொம்ப நிதானமானவர் ரவி ஆர்த்தி இடையே பிரச்சினை வந்தது இல்லை என்று சொல்ல மாட்டேன். அவர்களுக்கு இடையே பிரச்சனை வந்தால் ஜெயம் ரவிக்கு தான் நான் ஆதரவாக பேசுவேன். நீ எப்பொழுது பார்த்தாலும் அவருக்காகவே பேசுறியே என்று ஆர்த்தி என் மீது கோபித்துக் கொண்டது உண்டு. எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பெண் பிள்ளைகள் அப்படி இருக்கும் பொழுது எங்கள் வீட்டிற்கு வந்த முதல் ஆண் பிள்ளை ரவி எனக்கு பேரன் தான் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
அதேபோன்று பேரன் பிறந்த போது நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. மாமியார் மெச்சும் மருமகனாக நடந்து கொண்ட ஜெயம் ரவி மாமியார் மனைவிக்கு தெரியாமல் விவகாரத்தை முடிவை தன்னிச்சையாக எடுத்தது ஏன்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.