CRIME
“அடக் கொடுமையே.. ஷோரூமிலிருந்து வெளியே வந்த அடுத்த செகண்ட்..!” தடுப்புகளை உடைத்து பைக்கில் மோதிய புது கார்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!!
கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டம் சாகர் பகுதியில், ஷோரூமிலிருந்து புதிதாக வாங்கப்பட்ட கார் அடுத்த சில விநாடிகளிலேயே கடுமையான விபத்தில் சிக்கிய அதிர்ச்சி தரும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கார் வாங்கிய மகிழ்ச்சியில் அந்த நபர் வாகனத்தை ஷோரூமிலிருந்து வெளியே எடுத்த சில நொடிகளிலேயே, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாகப் பாய்ந்துள்ளது. அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு பிரதான சாலைக்கு வந்த கார், அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
புதிய கார் ஷோரூமில் இருந்து வெளியேறிய உடனே தடுப்புகளை நொறுக்கி, சாலையில் சென்ற பைக் மீது மோதும் இந்த முழு விபத்துக் காட்சியும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி கடுமையாகச் சேதமடைந்ததுடன், பைக்கில் சென்ற நபருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் ஓட்டுநரின் தவற்றால் நேர்ந்ததா அல்லது காரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்
