LATEST NEWS
JUSTNOW : மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராக பேச்சாளர் கவிதா ஜவஹர் நியமனம்..!!
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி கவிதா ஜவஹர் அவர்கள், தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் உடன் இருந்துள்ளார்.
இப்பணியமர்த்தல் மூலம் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சி மற்றும் தமிழ் மொழி மேம்பாட்டுப் பணிகள் மேலும் சிறப்பான முறையில் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
