LATEST NEWS
மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா…. என்ன சிகிச்சை எடுத்துகிறாங்க தெரியுமா?…. இணையத்தில் தீயாய் பரவும் செய்தி….!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் முதன்முதலில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனம் ஆடுவதன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார். இதனிடையே கடந்த 2012 ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுடன் நடித்த நிலையில் இருவருக்கும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் ஒன்றாக பல வருடங்கள் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வருடம் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன் பிறகு படங்களில் பிசியான சமந்தா சமீபத்தில் மயோசிட்டி சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட கடந்த மூன்று மாதங்களாக மிகவும் சிரமப்பட்டு வருவதாக உருக்கமாக ஒரு பதிவை வெளியிட்டார்.
அதன் பிறகு சற்று உடல் நலம் தேறியதாக கூறிய சமந்தா தற்போது ஆயுர்வேத மருத்துவர்களால் சிகிச்சை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மயோசிடிஸ் நோய்க்கு மருந்துகள் கண்டுபிடிக்காவிட்டாலும் அதிலிருந்து விடுபட பல காலம் எடுத்துக் கொள்ளும். தற்போது ஆயுர்வேத மருத்துவம் பலன் தருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து சமந்தா விரைவில் உடல்நலம் குணமடைய வேண்டி பலரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
