குலதெய்வம் கோயிலுக்கு பேரன் மற்றும் குடும்பத்துடன் சென்ற சீரியல் நடிகை கம்பம் மீனா… வெளியான அழகிய புகைப்படங்கள்… - Cinefeeds
Connect with us

CINEMA

குலதெய்வம் கோயிலுக்கு பேரன் மற்றும் குடும்பத்துடன் சென்ற சீரியல் நடிகை கம்பம் மீனா… வெளியான அழகிய புகைப்படங்கள்…

Published

on

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகப் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளன. அதில் வீட்டு வேலைக்கார பெண்ணாக செல்வி கதாபாத்திரத்தில் கம்பம் மீனா என்பவர் நடித்து வருகிறார்.

அந்த சீரியல் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தற்போது துணை நடிகையாக இருக்கும் இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போதே திருமணம் நடந்துள்ளது. பின்னர் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

தன்னுடைய குடும்ப வறுமை நிலை காரணமாக எல்ஐசி ஏஜென்ட் ஆக கம்பம் மீனா பணியாற்றியுள்ளார். மிகவும் தைரியமான பெண்ணாக வளம் வந்த இவர் அப்போதே தன்னுடைய சுற்று வட்டாரங்களில் மிகவும் பிரபலமான பெண்ணாக இருந்து வந்துள்ளார்.

அதன் பிறகு பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு என்ற சீரியலில் இவரை பாரதிராஜா நடிக்க வைத்துள்ளார். இவர் கிராமத்து வழக்கு முறையில் பேசி அனைவரையும் சிரிக்க வைத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அதேசமயம் தெற்கத்தி பொண்ணு சீரியல் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாகவும் அமைந்தது. அதன் பிறகு வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இதுவரை தமிழில் கிட்டத்தட்ட 75 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவர் சிலம்பாட்டம், வெடிகுண்டு முருகேசன், பூவா தலையா, மாயாண்டி குடும்பத்தார், முண்டாசுப்பட்டி, களவாணி மற்றும் சகுனி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் மறைந்த இயக்குனர் தாமிராவின் இயக்கத்தில் இயக்குனர் கே பாலசந்தர் மற்றும் இயக்குனர் பாரதிராஜா இணைந்து நடித்த இரட்டை சுழி திரைப்படத்தில் தன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பாரதிராஜாவுக்கே மருமகளாக நடித்த அசத்தினார்.

சிறுவயதில் தந்தையை இழந்து திருமணம் என்றாலும் தன்னுடைய வாழ்வில் பல தடைகளைக் கடந்து இன்று ரசிகர்கள் பலரும் கொண்டாடும் நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் மகனுக்கு சமீபத்தில் தான் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு தீஷிதன் என்று முருகப்பெருமானின் பெயரை சூட்டி உள்ளனர். தற்பொழுது கம்பம் மீனா குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.