CINEMA
‘Happy anniversary புருஷா!’… கணவருக்கு திருமண நாள் வாழ்த்து கூறி ரொமான்டிக் பதிவு வெளியிட்ட சீரியல் நடிகை நீலிமா…

தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. இவர் தனது நடிப்பால் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ‘தேவர்மகன்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை நீலிமா ராணி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த அஸ்வின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நீலிமா ராணி.
இவர் அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் தனது கணவருக்கு திருமண நாள் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்பதிவினை பார்த்த ரசிகர்களும் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…
View this post on Instagram