LATEST NEWS
40 வயதிலும் இளசுகளை சூடேற்றும் அழகு.. சீரியல் நடிகை ஸ்ருதியின் க்யூட்டான லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!

சின்னத்திரை சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை சுருதி ராஜ். இவர் முதன் முதலில் 1996 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான மாண்புமிகு மாணவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
அதன் பிறகு தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் நுழைந்தார்.
இவர் முதல் முதலாக தேவயானி நடித்த கோலங்கள் என்ற சீரியலில் தான் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார்.
அதன் பிறகு சன் டிவி மற்றும் விஜய் டிவி என அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
குறிப்பாக சன் டிவியில் தென்றல் சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் நடித்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
தற்போது இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பல வருடங்களாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் நடித்துக் கொண்டு இருந்தாலும் இவருடைய இளமை ததும்பும் முகமும் அழகும் இவருக்கு 40 வயதை காட்டிக் கொடுக்காமல் உள்ளது.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.