LATEST NEWS
“கடவுளே ஏன் இந்த சோதனை..?” 4 குழந்தைகளுடன் 2 சகோதரிகள் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை பிழியும் சோகச் சம்பவம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இரண்டு உடன்பிறந்த சகோதரிகள், தங்கள் நான்கு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
35 வயதான அஞ்சலி என்ற பெண், தனது 6 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அஞ்சலி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் அஞ்சலியின் கணவர் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார். கணவரை இழந்த துயரத்திலும் தீவிர மன உளைச்சலிலும் இருந்த அஞ்சலி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
வேறு கிராமத்தில் வசித்து வந்த அஞ்சலியின் மூத்த சகோதரியான சீதா (40), தனது மூன்று குழந்தைகளான ராக்கி (14), பிரியங்கா (11), மற்றும் ஷ்லோக் (6) ஆகியோருடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரின் இந்த திடீர் மறைவால் அக் குடும்பத்தினரும் கிராம மக்களும் உறைந்து போயுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் ஆன்மா அமைதியடையவும், இந்த ஆராத துயரத்தைத் தாங்கும் வலிமையை அக் குடும்பத்திற்கு இறைவன் வழங்கவும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
