CINEMA
துப்பாக்கி எப்பவுமே ரொம்ப ரொம்ப கனமானது…. சூசகமாக பேசிய SK…. யாரை சொல்கிறார் தெரியுமா…??

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு அமரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இது ஒரு ராணுவ வீரர் முகுந்தின் உண்மை கதையை மையமாக கொண்டது. இந்நிலையில் அமரன் படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியின் கனம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, துப்பாக்கி எப்பவுமே ரொம்ப ரொம்ப கனமானது தான். அதை சரியாக கையாள வேண்டும் என்று சூசகமாக பேசியுள்ளார்.