LATEST NEWS
சீனியர்களுக்கு ஜாக்பாட்.. 110 புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் அதிரடி நியமனம.? உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..!!
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுகவில் உட்கட்சி மறுசீரமைப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தத் தலைமை மெகா திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான தவெக-வின் சவால்களை முறியடித்து, கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்தத் திமுக தலைமை இந்த அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடங்கிய மறுசீரமைப்பு குழுவினர் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்தத் திட்டத்தின் முக்கியப் பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்குச் சுமார் 110 புதிய மாவட்டப் பொறுப்பாளர்களை நியமிக்கத் திமுக தலைமை முடிவு செய்துள்ளது. அத்துடன் கட்சியின் உட்கட்டமைப்பை வலுவாக்க ஒன்றியம், வட்டம் மற்றும் பேரூராட்சி போன்ற உள்ளூர் பகுதிகளைப் பிரித்து தொகுதி மறுசீரமைப்பு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் மற்றும் இறுதிப் பணிகள் அனைத்தும் கட்சி சாராத ஒரு தனி குழுவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் களச் சூழலைக் கருத்தில் கொண்டும், அனுபவமிக்க மூத்த நிர்வாகிகளின் வழிகாட்டுதலைப் பயன்படுத்திக் கொள்ளவும் முக்கிய நிர்வாகிகளுக்கான வயது வரம்பு 70-லிருந்து 75 ஆக உயர்த்தப்பட்டு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நடந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவைச் சரிசெய்யவும், அடுத்து வரவிருக்கும் 5 தொகுதி இடைத்தேர்தல்களில் அமோக வெற்றி பெறவும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து கட்சிப் பணிகளைத் துரிதப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
