LATEST NEWS
“வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட ‘ஸ்வீட் பாக்ஸ்…” உள்ளே இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மக்கள்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் பகுதியில், சர்பஞ்ச் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு இனிப்புப் பெட்டிகளுக்குள் 500 ரூபாய் நோட்டுகளை மறைத்து வைத்து விநியோகம் செய்ததாக அதிரடி குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒரு வாகனத்தில் இருந்து வாக்காளர்களுக்கு இந்த இனிப்புப் பெட்டிகள் தொடர்ச்சியாக விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளன. அந்த இனிப்புப் பெட்டிகளின் மீது சர்பஞ்ச் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரான அங்கித் சோனி என்பவரின் பெயரும், அவரது புகைப்படமும் அச்சிடப்பட்டிருந்தது அங்கிருந்தவர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதி கிராம மக்கள் விநியோகம் செய்யப்பட்ட ஒரு இனிப்புப் பெட்டியைப் பிரித்துச் சோதித்தபோது, உள்ளே இருந்த இனிப்புகளுக்கு அடியில் தலா இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தேர்தலுக்காக வாக்காளர்களுக்குப் பணமும் இனிப்புகளும் விநியோகித்த இந்த விசித்திரமான முறையின் வீடியோக்கள் மற்றும் புகார்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
