அய்யய்யோ.. சாலையில் சுருண்டு விழுந்த பிறகும் விடாமல் தாக்கிய கொடூரன்.. ஜாமீனில் வந்த திருட்டு வழக்கு கைதிக்கு நேர்ந்த கதி.. நடுரோட்டில் நடந்த பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யய்யோ.. சாலையில் சுருண்டு விழுந்த பிறகும் விடாமல் தாக்கிய கொடூரன்.. ஜாமீனில் வந்த திருட்டு வழக்கு கைதிக்கு நேர்ந்த கதி.. நடுரோட்டில் நடந்த பயங்கரம்..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள சமன்னா கிராமப்புற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சோட்டே லால் கச்சி என்ற இளைஞர் நடுரோட்டில் தடியால் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திருட்டு வழக்கில் சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளியாகி இருந்த சோட்டே லால், காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது சாஹேப் லால் படேல் என்ற வாலிபரால் பின்னாலிருந்து தடியால் தாக்கப்பட்டுள்ளார். இந்தத் திடீர் தாக்குதலால் சோட்டே லால் சாலையில் சுருண்டு விழுந்த பிறகும், குற்றம் சாட்டப்பட்டவர் அவரது கால்களில் தடியால் மீண்டும் மீண்டும் 30 நிமிடங்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த சோட்டே லால் கச்சி, தற்போது மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், சமன்னா கிராமப்புற காவல் நிலையப் பொறுப்பாளர் தர்மேந்திர உபாத்யாய் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தாக்குதல் நடத்திய பிறகு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய சாஹேப் லால் படேலை போலீசார் அனைத்துக் கோணங்களிலும் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in