LATEST NEWS
மருத்துவ உலகையே உலுக்கிய அபூர்வம்..! 2 மாத குழந்தையின் வயிற்றில் வளர்ந்த கரு… என்ன காரணம்..? அதிர்ந்துபோன் மருத்துவர்கள்..!!
கர்நாடக மாநிலத்தில் இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்றின் வயிற்றில் மற்றொரு கரு வளர்ந்து வரும் அரிய மருத்துவ நிலை கண்டறியப்பட்டுள்ளது பெற்றோர் மற்றும் மருத்துவர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கதக் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினரின் இந்தக் குழந்தைக்கு திடீரென வயிறு வீங்கியதோடு, தொடர்ந்து வாந்தியும் எடுத்து வந்ததால் சிந்தனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் முதலில் வயிற்றில் கட்டி இருப்பதாகக் கருதினர்; ஆனால் ஸ்கேன் உள்ளிட்ட கூடுதல் பரிசோதனைகளில் அது கட்டி அல்ல, மற்றொரு கரு என்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து விளக்கிய மருத்துவர்கள், கர்ப்ப காலத்தில் உருவாகும் இரட்டைக் கருக்களில் ஒன்று மட்டும் முழுமையாக வளர்ச்சியடைந்து, மற்றொன்று வளர்ச்சியடையாமல் வளர்ந்த கருவின் உடலுக்குள் சிக்கிக்கொள்ளும் நிலை இது என்றும், இது மருத்துவ உலகில் ‘பீடஸ் இன் பீடு’ என்று அழைக்கப்படுவதாகவும் கூறினர்.
சுமார் 50 லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படக்கூடிய இந்த அபூர்வ பாதிப்பு, இந்தியாவில் இதுவரை 230 குழந்தைகளுக்கும், கர்நாடகாவில் இது 3-வது முறையாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது குழந்தைக்கு அவசர மற்றும் கூடுதல் சிகிச்சைகள் தேவைப்படுவதால் பல்லாரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு ரத்தப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே அறுவை சிகிச்சை மூலம் அந்தக் கருவை அகற்றுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
