LATEST NEWS
நடிகர் சல்மான் கான் அணிந்திருந்த வாட்ச்சின் விலை மட்டும் இவ்வளவா?… அப்படி என்ன ஸ்பெஷல்… விலையைக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளாகிய ரசிகர்கள்..!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சல்மான்கான். 57 வயதாகும் இவர் இன்றும் பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது டைகர் படத்தின் மூன்றாவது பாகத்தில் இவர் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் சல்மான் கான் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து புதிய கைக்கடிகாரம் ஒன்றை அணிந்து வருகின்றார். அதாவது அவரை 57ஆவது பிறந்த நாளிலிருந்து அந்த கைக்கடிகாரத்தை அவர் அணிகிறார்.
ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ள இந்த ரோலக்ஸ் கைகடிகாரம் தங்கத்தால் ஆனது என்றும் வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதன் விலை சுமார் 46.8 லட்சம் எனவும் தற்போதைய செய்தி வெளியாகி ரசிகர்களை வாய் அடைக்க வைத்துள்ளது.