இனிமே கம்ப்யூட்டர் சென்டருக்கு அலைய தேவையில்லை..! வருகிறது ‘வெற்றி இ-சேவை 2.0’… மக்களுக்கு கிடைக்கப்போகும் சூப்பர் வசதிகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இனிமே கம்ப்யூட்டர் சென்டருக்கு அலைய தேவையில்லை..! வருகிறது ‘வெற்றி இ-சேவை 2.0’… மக்களுக்கு கிடைக்கப்போகும் சூப்பர் வசதிகள்..!!

Published

on

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இ-சேவை மையங்கள் மக்களுக்குத் தேவையான வருவாய்ச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பட்டா தொடர்பான அனைத்து விதமான சேவைகளையும் வழங்கி வருகின்றன. கடந்த 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 843 இ-சேவை மையங்கள் செயல்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில்தான் தற்போது தமிழக அரசின் இ-சேவை மையங்கள் மூலமாக இதுவரை வழங்கப்பட்டு வந்த சேவைகளை எளிமையானதாகவும், மக்களுக்கு வேகமாகக் கொண்டு சேர்க்கும் வகையிலும் “வெற்றி தமிழ்நாடு இ-சேவை 2.0” என்ற புதிய திட்டத்தைக் தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது. மேலும், இதற்கான டெண்டர் அறிவிப்பும் தற்போது வெளியாகியிருக்கிறது.

இ-சேவை மையம் நடத்தத் தகுதியான தொழில்நுட்ப நிறுவனங்கள், வருகிற நவம்பர் 3-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் இந்த அரசின் டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் புதிய 2.0 சேவையின் மூலம் அரசின் இ-சேவைத் தளம் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு, வேகமான சேவைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி தமிழ்நாடு இ-சேவை மையம் 2.0 அமைந்தால், ஐந்து அம்ச வசதிகள் மக்களுக்குச் சென்றுசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மின் கட்டணம் முதல் ஜாதிச் சான்றிதழ் வரை 200-க்கும் மேற்பட்ட சேவைகள் எளிமையான முறையில், அதுவும் வேகமாக, ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்படும்.

Advertisement

மேலும், ஒரு பொதுவான அறிவிப்பு வரும் நேரத்தில் பல பேர் ஒரே நேரத்தில் லாகின் செய்யும் போது ஏற்படும் சர்வர் டவுன் பிரச்சினையைக் குறைப்பதற்கான வேலைகள் நடைபெறும் எனவும், சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் சேவைகள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஆதார், பான் கார்டு உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்க அதிநவீன பாதுகாப்புத் தொழில்நுட்பம் வழங்கப்படும். புதிய 2.0 தளம் முழுக்க முழுக்க மொபைல் ஃப்ரெண்ட்லியாக இருக்கும் என்பதால், எல்லாச் சேவைகளுக்கும் கம்ப்யூட்டர் சென்டர்களுக்குச் செல்ல வேண்டிய தேவை இருக்காது என்றும், வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் உடனடி ஸ்டேட்டஸ் வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in