LATEST NEWS
விஜய்க்கு தங்கையாக நடித்த குட்டி பொண்ணா இது?…. இப்போ கிளாமர் லுக்கில் கலக்குறாங்களே…. வைரல் புகைப்படம்….!!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். அவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இதனிடையே ஏ ஆர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் முதன் முறையாக வெளியான துப்பாக்கி திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார்.
அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக இரண்டு நடிகைகள் நடித்திருந்தனர். அதில் ஒருவர் தான் நடிகை சஞ்சனா சாரதி. இந்நிலையில் நடிகை சஞ்சனா சாரதியின் சமீபத்திய கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய்க்கு தங்கையாக நடித்த குட்டி பொண்ணா இது என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
