LATEST NEWS
பகீர்..! நடுவானில் மோதிய 2 ராணுவ விமானங்கள்.. 4 விமானிகள் உடல்சிதறி பலியான கோர விபத்தின் பதறவைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு..!
பிலிப்பைன்ஸ் நாட்டின் லிபா நகரில் நடைபெற்ற ராணுவப் பயிற்சியின்போது இரண்டு SF-260 ரக விமானங்கள் வான்வெளியில் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 4 ராணுவ விமானிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். வழக்கமான பயிற்சிப் பறப்பின்போது எதிர்பாராதவிதமாக இந்த இரு விமானங்களும் மோதிக்கொண்டதாக அந்நாட்டு விமானப்படை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கிய விமானங்களைச் சேர்ந்த நான்கு வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வான்வெளியில் பறந்துகொண்டிருந்த விமானங்கள் திடீரென மோதி விபத்துக்குள்ளான பதறவைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து பிலிப்பைன்ஸ் ராணுவ உயர் அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். தொழில்நுட்பக் கோளாறா அல்லது மனிதத் தவறா என்ற கோணத்தில் விரிவான புலனாய்வு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
